மினிஸ்டர் பதவி இல்லனா என்ன.. மகனுக்கு தனித்துறையே உருவாக்கும் ஸ்டாலின்??

வெள்ளி, 7 மே 2021 (13:43 IST)
புதிதாக நியமிக்கப்பட உள்ள துறைக்கு திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி தலைமை தாங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள இந்த சூழலில் மு.க.ஸ்டாலினின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
இந்நிலையில், புகார் மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு காண புதிய துறை ஒன்றை நியமிக்கவும் முடிவு செய்துள்ளார். ஆம், புகார் மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம் செய்யப்படவுள்ளது. திமுக தனது தேர்தல் பரப்புரையின் போது பெற்ற புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கிடைக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
இதனிடையே, புதிதாக நியமிக்கப்பட உள்ள துறைக்கு திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி தலைமை தாங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்டாலினின நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட உள்ள இப்பிரிவின் தலைமை பொறுப்பில் உதயநிதி இருப்பார் என பேச்சுக்கள் அடிபடுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்