400 வருடங்களுக்கு பின் கர்ப்பிணியான மைசூர் மகாராஜா வாரிசு: சாபம் நீங்கியதா?

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (04:49 IST)
இந்தியா கடந்த 1950ஆம் ஆண்டு குடியரசாக மாறிய பின்னர் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. இருப்பினும் மைசூர் மகாராஜா குடும்பத்தின் மீது அப்பகுதி மக்கள் அதிக மரியாதை செலுத்தி வந்தனர். இந்த நிலையில் மைசூர் மகாராஜா குடும்பத்தினர்களுக்கு வாரிசு இருக்காது என்று திருமலராஜாவின் மனைவி அலமேலு அம்மா சாபம் இட்டதாகவும் இதனால் , மைசூர் ராஜா குடும்பத்தில் வந்த ராஜாக்கள் சிறிய வயதில் மரணமடைந்து வந்ததாகவும், குழந்தை வாரிசு இல்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.



 


இதை உறுதி செய்வதை போலவே மைசூர்  ராஜாவாக இருந்த ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா வாடியார் அவர்களுக்கும் இவரது மனைவியும், மகாராணியுமான பிரமோத குமாரி தம்பதிகளுக்கு வாரிசு இல்லை. ஆனாலும் இந்த தம்பதிகள் யதுவீரை பிரமோத குமாரி என்பவரை தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.

கடந்த ஆண்டு யதுவீரை பிரமோத குமாரிக்கும் த்ரிஷிகா என்பவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போத் த்ரிஷிகா கர்ப்பமாகியுள்ளார். எனவே 400 ஆண்டுகளாக இருந்த சாபம் நீங்கிவிட்டதாகவும் மைசூர் மகாராஜா பரம்பரைக்கு வாரிசு கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
அடுத்த கட்டுரையில்