மியான்மர் அகதிகள் மூலம் மணிbபூருக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் வந்ததாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் ஏற்கனவே பதட்ட நிலையில் இருக்கும் நிலையில் 700க்கும் மேற்பட்ட மியான்மர் அகதிகள் உரிய ஆவணங்கள் இன்றி மாநிலத்தில் நுழைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அஸ்ஸாம் ரைபிள் படை பிரிவியிடம் மணிப்பூர் மாநில அரசு விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. கடந்த 23ஆம் தேதி மணிப்பூரில் 718 மியான்மர் அகதிகள் உரிய ஆவணங்கள் இன்றி வந்ததாகவும் அவர்களிடம் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் இருந்ததாகவும் எனவே இது குறித்து அசாம் ரைபிள் படை பிரிவினர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மணிப்பூர் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சட்டவிரோதமாக நுழைந்த மியான்மர் அகதிகள் புகைப்படங்கள் மற்றும் பிற ஆவணங்களையும் மணிப்பூர் காவல்துறை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.