கொரோனாவிற்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் - பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (19:06 IST)
இந்தியாவில் 16,116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,302 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 519 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,477 ஆக உயரந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  பாரத பிரதமர் மோடி தனது டுவிட்டர்  பக்கத்தில்,இனம், மதம், நிறம், சாதி, மொழி, என எந்தப் பாகுபாடும் இல்லாமல் கொரோனா பரவுவதாக பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

இனம், மதம்,மொழி, சாதி,  என எந்த பாகுபாடும் இன்றி கொரோனா பரவுகிறது. கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து ஒற்றுடன் செயல்பட வேண்டும் . நாம் அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கை நமது மனித குலத்திற்கு நம்பிக்கை தருவதாக அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்