ஹிஜாபுக்கு மறுப்பு: தேர்வு எழுத்தாத 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள்!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (11:43 IST)
ஹிஜாபுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
கர்நாடகா மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு தடைவிதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது. 
 
இந்நிலையில் அம்மாநிலத்தில் நேற்று பொதுட்தேர்வு தேர்வு தொடங்கியது. மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி கிடையாது என்று கர்நாடக அமைச்சர் முன்னதாகவே அறிவித்து இருந்தார். இதனால் கர்நாடகாவில் பொதுத்தேர்வுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 
 
எனவே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு தேர்வுக்கு வராத மாணவர்களோடு ஒப்பிடும் போது 45.7% பேர் அதிகம் என கூறப்படுகிறது.
 
மேலும் பொதுத்தேர்வில் 99.99% மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுதினர் என்று அம்மாநில கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்