தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன்..! எதற்காக தெரியுமா.?

Senthil Velan
வியாழன், 25 ஏப்ரல் 2024 (11:11 IST)
ஐ.பி.எல். போட்டிகள் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில் நடிகை தமன்னா வருகிற 29-ந்தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
 
2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு செய்ய வியாகாம் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிகள் பேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டது. 
 
பேர்பிளே செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

ALSO READ: மணல் குவாரி வழக்கு..! ED விசாரணைக்கு 5 ஆட்சியர்கள் இன்று ஆஜர்..!
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி, பேர்பிளே செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். வருகிற 29-ந்தேதி நடிகை தமன்னா நேரில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்