நிதிஷ் குமாரின் கட்சி நிர்வாகி மர்ம கும்பலால் சுட்டுக்கொலை.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (11:04 IST)
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சி நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சின்ன சின்ன வன்முறை நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆளும் நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் இதனால் பெரும் பதட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் பெயர் சௌரவ் குமார் என்றும் பாட்னாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு தனது நண்பர்களுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் தான் திடீரென நான்கு பேர் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொன்றதாக தெரிகிறது

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்