பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த தாய் - எதற்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (16:24 IST)
தான் பெற்ற மகனை தாயே கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மகாராஷ்டிரா மாநிலத்தின் பயந்தர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் மகன் ராம்சரண் ராம்தாஸ்(21).  இவர், சிறுவயதில் இருந்தே போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி பல குற்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
 
முக்கியமாக பெண்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவரது உறவினர்கள் உட்பட 12 பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
 
அதை விட கொடூரமாக, அவரது தாய் மற்றும் வளர்ப்பு தாய் ஆகிய இருவரையும் கூட அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் ராம்சரண் மீது வெறுப்படைந்த அவரின் தாய், இப்படி ஒரு மகன் இருப்பதை விட சாவதே மேல் என முடிவெடுத்து, அவனை கொலை செய்ய கூலிப்படையை நாடியுள்ளார்.
 
ரூ.50 ஆயிரத்தை முன் பணமாக பெற்றுக்கொண்ட கூலிப்படையினர், ராம்சரணை தனியாக அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தனர். ஆனால், போலீசாரின் விசாரணையில் ராம்சரணின் தாய் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவரும், கூலிப்படையை சேர்ந்த மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்