இந்நிலையில், அவனது உடலை வீட்டிற்குள்ளே எடுத்து செல்ல ஈஸ்வரம்மா வசிக்கும் வீட்டின் உரிமையாளர் ஜெகதீஷ் குப்தா அனுமதிக்கவில்லை. அவரின் மகளுக்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் ஆனது எனவும், எனவே, சடலத்தை வீட்டிற்குள்ளே எடுத்து வருவது அபசகுணமாக அமையும் எனக்கூறி அவர் மறுத்து விட்டார்.
இதனால், தன்னுடைய மகனின் உடலை வீட்டின் வெளியே வைத்துக்கொண்டு, கொட்டும் மழையில் நின்றுள்ளார் ஈஸ்வரம்மா. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், சடலைத்தை வீட்டின் உள்ளே வைக்க அனுமதி தருமாறு ஜெகதீஷுடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால், அவர் தனது நிலைப்பாடில் உறுதியாக இருந்ததால், உடனடியாக ஒரு கண்ணாடி சவப்பெட்டியை வரவழைத்து அதில் அவரின் மகனின் சடலைத்தை வைத்தனர். மேலும், இறுதி சடங்கிற்கு தங்களால் ஆன பண உதவியும் செய்தனர்.