இந்தியாவுக்குப் புதிய நாடாளுமன்றம் – மோடி ஆலோசனை !

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (09:44 IST)
இப்போது இருக்கும் நாடாளுமன்றத்தில் சில பாதிப்புகள் ஏற்படுவதால் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவது தொடர்பாக மோடி அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய நாடாளுமன்றம் 1921 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு 1927 ஜனவரி 18 ஆம் நாள் வைசிராய் இர்வின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இன்னும் 8 ஆண்டுகளில் நாடாளுமன்றக் கட்டிடம் நூற்றாண்டு விழாக் காண இருக்கிறது. இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவது தொடர்பாக மோடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

36 எம்.பி.க்களுக்கான புதிய வீடுகளைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ’ நமது நாடாளுமன்றக் கட்டிடம் சில பாதிப்புகளுக்கும் உள்ளாகியுள்ளதை சபாநாயகர் சுட்டிக் காட்டியுள்ளார். அதனால் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டலாம் என்று அவர் கூறியுள்ளார். இந்த பழைய நாடாளுமன்ற கட்டடத்தைப் புதுப்பிப்பதோ அல்லது புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்படுவதோ  எதுவென்றாலும் 2022க்குள் முடித்தாக வேண்டும். நமது 75ஆவது சுதந்திர தினத்துக்குள் இதை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளேன். காலம் குறைவாக இருப்பதால் ஆலோசனைகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் முடிவெடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்