மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சிவசேனாவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் கங்கனா ரணாவத் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சிவசேனா கட்சியின் தலைவர் மற்றும் சிவசேனாவின் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் கங்கனா ரனாவத்தை நேற்று திடீரென மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலா சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்ததாக தெரிகிறது
கங்கனாவை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராம்தாஸ் அத்வாலா, ‘கங்கனா ரணாவத்துக்கு அரசியலில் சேரும் எண்ணம் இல்லை என்றும் அவரது கவனம் முழுக்க முழுக்க நடிப்பில் தான் உள்ளதாகவும் தெரிவித்தார். ஒருவேளை கங்கனா அரசியலில் சேர விரும்பினால் பாஜகவில் இணைய அவருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராம்தாஸ் அத்வாலா தெரிவித்தார்.
மேலும் கங்கனா ரனவத் தனது அடுத்த படத்தின் தலித் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அந்த கேரக்டர் மூலம் அவர் ஜாதி வெறுப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும் என்றும் இந்த படம் வெளிவந்தால் ஜாதி மோதல்கள் குறையும் என்று அவர் தன்னிடம் கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
கங்கனா ரனாவத்தை மத்திய அமைச்சர் ஒருவர் அவரது மும்பை வீட்டுக்கே சென்று சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது