எச்.ராஜா வீட்டில் அண்ணாமலை: சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?

வியாழன், 10 செப்டம்பர் 2020 (18:48 IST)
எச்.ராஜா வீட்டில் அண்ணாமலை: சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?
ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பதும் அவர் பாஜகவில் இணைந்த ஒரு சில நாட்களில் துணை தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார் என்பதும் தெரிந்தது. அது மட்டுமின்றி அவர் விரைவில் ராஜ்யசபா எம்பியாக மாற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது. மோடி மற்றும் அமித்ஷா அவருக்கு ராஜசபா பதவி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை அவ்வப்போது தொலைக்காட்சி விவாதங்களில் ஆணித்தரமான கருத்துக்களை தெரிவித்து வருவது பாஜக மீதான தவறான கண்ணோட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள பாஜக பிரமுகர் எச்.ராஜா வீட்டிற்கு சென்று அண்ணாமலை அவர்கள் நேரில் சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பின் போது இருவரும் முக்கிய விஷயங்கள் குறித்து பேசியதாகவும் தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை என்பது குறித்து ஆளும் ஆலோசனை செய்ததாகவும் தெரிகிறது 
 
இதுகுறித்து அண்ணாமலை தனது டுவிட்டரில் இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்று எங்கள் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவர் எச்.ராஜா அவரக்ளை காரைக்குடியில்,அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். இவர் தைரியம், கனிவான இதயம் மற்றும் நேர்மை ஆகியவற்றின் எடுத்துக்காட்டு. அவர் பண்ணையில் வளர்க்கும் பூர்வீக ரக மாடுகளை பார்த்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்