ஒமைக்ரான் வைரஸால் 4வது அலை பரவாது..! – நோய் தொற்று நிபுணர் கருத்து!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (08:18 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் நான்காவது அலை பரவல் குறித்து நோய் தொற்று நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் தொடர்ந்து இருந்து வந்தாலும், கடந்த சில மாதங்களில் தொற்று பரவல் வெகுவாக குறைந்திருந்தது. இதனால் பல்வேறு தளர்வுகளையும் மத்திய, மாநில அரசுகள் வழங்கின.

இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய தொற்று நோய் திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் “ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு அதிரடியாக 90 சதவீதம் அதிகரித்தது. 2 வாரங்களாக தினமும் பாதிப்பு கூடுகிறது.

ஒமைக்ரானால் நான்காவது அலை வராது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனா குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை. பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. இந்த காரணங்களால் வழக்கத்தை விட பாதிப்பு கூடியுள்ளது.

இணை நோய்கள் இல்லாத தடுப்பூசி செலுத்திய ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அது சாதாரண காய்ச்சல் போன்ற அறிகுறிகளாகதான் இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்