பெற்ற மகளை நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த தந்தை

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (12:39 IST)
உத்தரபிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகளை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உபி மாநிலத்தில் உள்ள கம்லாபூர் பகுதியை சேர்ந்த 50 வயது அப்பா ஒருவர், கல்யாணம் ஆகி விவாகரத்து பெற்ற 32 வயதுள்ள தனது மகளை திருவிழாவுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த அப்பா அவரது நண்பர் மான் சிங்கை போன் செய்து அழைத்துள்ளார்.
 
அதன்படி மான்சிங்கும் பைக்கில் வந்துள்ளார். பின்னர் தந்தை தன் மகளை மான் சிங்கின் பைக்கில் ஏற்றி அவரது இன்னொரு நண்பர் மீரஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் யாரும் இல்லை. இதனால் அந்த பெண்ணை அவரது தந்தையும், மான் சிங்கும், மீரஜும் மாறி மாறி 18 மணிநேரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இதன்பின்னர் அந்த கொடூரர்கள் பிடியில் இருந்து தப்பித்த அந்த பெண், வீட்டிற்கு சென்று தனது அம்மாவிடம் அனைத்து விஷயத்தையும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது அம்மா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து. போலீசார் மீரஜை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அந்த பெண்ணின் தந்தையையும், மான் சிங்கையும் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்