கார்த்திக்கின் இரண்டாவது இன்னிங்ஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘அனேகன்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ என இப்போதும் கலக்கி வருகிறார் கார்த்திக். அடுத்ததாக, தன்னுடைய மகன் கெளதம் கார்த்திக்கிற்கு அப்பாவாகவே ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தில், அவருக்கு அப்பாவாக கார்த்திக் நடிக்கப் போகிறார் என்கிறார்கள். அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கும் இந்தப் படத்தில், ‘மேயாத மான்’ பிரியா பவானி சங்கர் மற்றும் இந்துஜா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். ஸ்டிரைக் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.