நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

Mahendran
திங்கள், 24 ஜூன் 2024 (18:10 IST)
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது என்றும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநிலங்களே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும்,  நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளது என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
மேலும் கடந்த 2017க்கு முன்பு இருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சுமூகமானதாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே நீட் தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்த எதிர்ப்பு மற்ற மாநிலங்களில் இருந்தும் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினால் நீட் தேர்வு தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் இந்த நீட் தேர்வை முற்றிலும் நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் புதிய மசோதா தான் இயற்ற வேண்டும் என்பதும் அதற்கு எதிர் கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்