மாசமானா மாமூல் கேட்டு மிரட்டுறார்! – அமைச்சர் மீது புகார் அளித்த காவல் ஆணையர்!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (08:51 IST)
மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சர் மாமூல் கேட்டு மிரட்டுவதாக முன்னாள் காவல்துறை ஆணையர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019ல் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில் சட்டமன்ற உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் அனில் தேஷ்முக். இந்நிலையில் இவர் மீது முன்னாள் காவல் ஆணையர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை முன்னாள் காவல்துறை ஆணையரான பரம் பிர் சிங், உள்துறை அமைச்சர் மாதம்தோறும் 100 கோடி ரூபாய்க்கு குறையாமல் மாமூல் வசூலித்து தன்னிடம் வழங்க வேண்டுமென மிரட்டியதாக அவர் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்