கொலை செய்யப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை!

Webdunia
புதன், 23 மே 2018 (15:15 IST)
மத்தியப்பிரதேசத்தில் பசுவை கொன்றதாக கொல்லப்பட்டவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 
மத்தியப்பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் உள்ள மைகர் நகரில் சிராஜ்கான் மற்றும் ஷகீல் ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் தங்களுக்கு வர வேண்டிய பணத்தை வாங்க பக்கத்து ஊர் வரை சென்றுள்ளனர்.
 
பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பி வரும் போது அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளனர். மாட்டை கொன்று விட்டு பணம் எடுத்துச் செல்வதாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலே மயக்க நிலையில் கிடந்துள்ளனர்.
 
அவ்வழியே சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிராஜ்கான் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
ஷகில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காவல்துறையினர் ஷகில் மற்றும் சிராஜ்கான் இருவர் மீதும் பசு மாட்டை கொன்றதாக வழக்கு பதிவு செய்தனர். இவர்களை தாக்கிய கும்பல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
சிராஜ்கான் மரணமடைந்ததால் ஷகில் மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிராஜ்கான் கூறியதாவது:-
 
அவர்கள் எடுத்து வந்தது காலை மாட்டு மாமிசம். அத்துடன் அவர்களை அதை விலை கொடுத்து வாங்கி உள்ளனர். இவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தினால் அந்த கும்பல் தாக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்