ஒருத்தனாவது சாகனும் ; போரட்டக்களத்தில் போலீசாரின் குரல் : அதிர்ச்சி வீடியோ

புதன், 23 மே 2018 (12:12 IST)
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 11 அப்பாவி பொதுமக்கள் பலியாகிவிட்டனர்.

 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்  தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நோக்கி நேற்று காலை பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது, பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 11 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், போராட்டக்களத்தில் பொதுமக்கள் அங்கும் இங்கும் ஓட, வேனில் ஒரு அதிகாரி ஏறி பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் குறி வைக்கிறார். அப்போது வேனின் கீழே நிற்கும் ஒரு காவல்துறை அதிகாரி “போடு.. ஒருத்தனவாது சாகனும்” என குரல் கொடுக்கிறார். இது வீடியோவில் பதிவாகியுள்ளது.

 
மக்களை பாதுகாக்கும் பணியில் இருக்கும் போலீசார் இப்படி கொலை வெறியுடன் செயல்படும் இந்த வீடியோவைக் கண்டு பலரும் அதிர்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
முதலில் தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கி சூடு நடத்தபோவதாக எச்சரிக்கை, அப்படியே சுட்டாலும் முட்டிக் காலின் கீழேதான் சுட வேண்டும் என நடைமுறைகள் இருக்கும் போது, நெஞ்சு, தலை என போலீசார் குறி வைத்து சுட்டுக்கொலை செய்தது திட்டமிட்ட படுகொலை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

#WATCH Local police in Tuticorin seen with assault rifles to disperse protesters demanding a ban on Sterlite Industries. 9 protestors have lost their lives. #TamilNadu. (Earlier visuals) pic.twitter.com/hinYmbtIZQ

— ANI (@ANI) May 22, 2018


Video C
redit to ANI

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்