கேரளாவில் ஊரடங்கு ரத்து: முதல்வர் பினரயி விஜயன் அறிவிப்பு

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (08:19 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கேரள அரசு சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்படும் என்றும் கூடிய விரைவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்
 
பள்ளிகள் கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாக ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி செலுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்