9000 ரயில் நிலையங்களில் ராமர் கோயில் திறப்பு நேரலை! மத்திய அரசு தகவல்..!

Mahendran
வெள்ளி, 19 ஜனவரி 2024 (11:54 IST)
ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நாடு முழுவதிலும் உள்ள 9000 ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை அடுத்து இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். 
 
மேலும் ரஜினிகாந்த், அமிதாபச்சன், சிரஞ்சீவி உள்பட பல திரை உலக பிரபலங்களும் பல தொழில் அதிபர்களும் பல மாநில அமைச்சர்கள் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள உள்ளனர். 
 
ராமர் கோவில் திறப்பு விழாவை அடுத்து அயோத்தி முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு கும்பாபிஷேகம் நடந்த மறுநாளில் இருந்து தான் அனுமதி அளிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை நேரடியாக பொதுமக்கள் பார்க்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் 9 ஆயிரம் திரைகளின் மூலம்  நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது மற்றும் பள்ளி
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்