முலாயம் சிங் உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார்: மருமகள் அபர்ணா யாதவ்

Siva

வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:14 IST)
முலாயம் சிங் யாதவ் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவர் ராமர் கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பார் என அவரது மருமகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை எனவும், ஆனால் அதே நேரத்தில் ஜனவரி 22ஆம் தேதிக்கு பின் ராமர் கோவிலுக்கு செல்லவிருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்த நிலையில்  மற்றொரு மகனான பிரதிக் என்பவரின் மனைவி அபர்ணா என்பவர் தனது மாமனார் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பார் என்று தெரிவித்தார். அபர்ணா தற்போது பாஜகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து அவர் மேலும் கூறிய போது ராமர் கோயில் குறித்த எதிர்க்கட்சியினர் எண்ணம் தவறாக உள்ளது என்றும் ராமர் கோயில் எந்த கட்சியை சார்ந்ததும் இல்லை என்றும் ஒருவரால் கட்டப்பட்டது இல்லை என்றும் பலரது நம்பிக்கையை உருவானது என்றும் தெரிவித்தார் 
 
கண்டிப்பாக முலாயம் சிங் யாதவ் உயிரோடு இருந்திருந்தால் அவர் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு சென்று இருப்பார் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்