எல்.ஐ.சி பங்குகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி. பங்குகளில் ஒரு பங்கு தனியாருக்கு விற்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு எல்.ஐ.சி. ஊழியர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதை எதிர்த்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எல்.ஐ.சி ஊழியர்கள் 1 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.