ஊருக்குள் புகுந்து தாக்கிய சிறுத்தை; சிதறி ஓடும் மக்கள்! – வைரல் வீடியோ!

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (13:28 IST)
கர்நாடகாவில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை பலரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மைசூர் பகுதியில் உள்ள கனகா நகர் என்ற பகுதியில் சிறுத்தை ஒன்று புகுந்தது. சிறுத்தையை கண்ட மக்கள் பலர் வீடுகளுக்குள் புகுந்ததுடன், வனத்துறைக்கும் தகவல் அளித்துள்ளனர்.

அதற்குள்ளாக சிறுத்தை மக்கள் குடியிருப்பு பகுதியில் நடமாட தொடங்கியுள்ளது. ஒரு சிலர் சிறுத்தையை விரட்ட முயன்றுள்ளனர். ஆனால் பாய்ந்து சென்ற சிறுத்தை வழியில் எதிர்பட்டவர்களை தாக்கிவிட்டு மீண்டும் புதர்களுக்குள் சென்று பதுங்கியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அந்த ஆண் சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்து சென்றுள்ளனர். சிறுத்தை சிலரை துரத்தி சென்று தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்