காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..

Mahendran
வெள்ளி, 19 ஜூலை 2024 (16:01 IST)
கர்நாடகா மாநிலம் கேஆர்எஸ் அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கர்நாடகா மாநிலம் கேஆர்எஸ்  அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால், எந்நேரத்திலும் 25 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
கர்நாடகா மாநிலம் கேஆர்எஸ் அணையில் இருந்து தற்போது 500 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், எந்நேரத்திலும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான 124 அடியில் தற்போது 118 அடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கேஎஸ்ஆர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு கூறியது. ஆனால் தற்போது தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக தண்ணீர் திறந்து விட வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அரசு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்