மீண்டும் வீடியோ கான்பரன்சில் வழக்கு விசாரணைகள் உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (11:33 IST)
கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலையின்போது உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களிலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததை அடுத்து மீண்டும் நேரடி விசாரணை நடைபெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
 
மேற்கு வங்க மாநிலத்தில் ஒமிக்ரான் அதிகரித்து வருவதால் கொல்கத்தா உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் ஜனவரி 4ஆம் தேதி முதல் காணொளி வாயில் காட்சியாகவே விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல் சென்னை உள்பட மற்ற உயர் நீதிமன்றங்களிலும் விரைவில் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்