ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள புத்தேனந்தல் கிராமத்தை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவருக்கு கலையூரை சேர்ந்த கருப்பு ராஜா என்ற நபருடம் பழக்கம் இருந்து வந்துள்ளது. இது காதலாக மாறிய நிலையில் திருப்பூரில் பணிபுரியும் கருப்பு ராஜா ஊருக்கு வரும்போதெல்லாம் இளம்பெண்ணை சந்திப்பதும், தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பதும் தொடர்ந்துள்ளது.
அவ்வாறாக ஒருநாள் அவர்கள் உல்லாசமாக இருப்பதை பெண்ணின் சித்தப்பா முறை நபரான முனியசாமி என்பவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சமீபத்தில் கருப்பு ராஜாவுடன் திருமணம் செய்து வைப்பதாக இளம்பெண்ணை மதுரைக்கு அழைத்து சென்ற முனியசாமி இளம்பெண்ணின் விருப்பம் இல்லாமல் தாலி கட்டி மீண்டும் வன்கொடுமை செய்துள்ளார். இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.
செல்போனில் இருந்த இந்த புகைப்படங்களை எதேச்சையாக பார்த்த முனியசாமியின் மனைவி இளம்பெண்ணின் வீட்டில் சென்று சண்டையிட, இளம்பெண் அனைத்து உண்மைகளையும் சொல்லியுள்ளார். அதன் அடிப்படையில் வழக்குபதிவு செய்துள்ள போலீஸார் முனியசாமியை கைது செய்துள்ளதுடன், தலைமறைவான கருப்பு ராஜாவையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.