கவிதாவுக்கு ஏப்ரல் 9 வரை நீதிமன்றக் காவல்! செந்தில் பாலாஜி போல் ஆகுமா?

Siva
செவ்வாய், 26 மார்ச் 2024 (15:09 IST)
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த சில நாட்களுக்கு முன்னால் கைது செய்யப்பட்ட தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவுக்கு ஏப்ரல் 9 வரை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டே வரும் நிலையில் கவிதாவுக்கும் அதே போன்ற ஒரு நிலைமை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
 
டெல்லி மதுபான கொள்கை பண மோசடி விவகாரத்தில் மார்ச் 15ஆம் தேதி தெலங்கானா எம்எல்சி கவிதாவின் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடிவில் கவிதாவை கைது செய்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அவரது காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்