சோனியா, மன்மோகனுக்கு கடமை பட்டிருக்கிறோம்; கார்த்தி சிதம்பரம் நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (11:17 IST)
சிறையில் சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன்சிங் சந்தித்து பேசியது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. எங்கள் குடும்பம் அவர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என கார்த்தி சிதம்பரம்  தெரிவித்துள்ளார். 
 
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொடர்புடையதாகக் கூறி கடந்த ஆகஸ்டு 21 ஆம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 
 
சிபிஐ காவலில் இருந்து வந்த ப.சிதம்பரம் செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின்படி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 14 நாட்கள் சிறைவாசம் செப்டம்பர் 19 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் அவர்களை அக்டோபர் 3 ஆம் தேதி வரை சிறைகாவலை நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே மீண்டும் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லி திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
இதற்கு ஏற்ப அந்த சந்திப்பும் நிகழ்ந்தது. இந்த சந்திப்பில் சில முக்கிய ஆலோசனைகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்ன ஆலோசனைகள் நடந்து என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இது குறித்து கார்த்தி சிதம்பரம் தெரிவித்ததாவது, 
சிறையில் சிதம்பரத்தை சோனியா காந்தி, மன்மோகன்சிங் சந்தித்து பேசியது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. இரண்டு பேரும் சந்தித்து ஆதரவு வழங்கியதற்கு எங்களது குடும்பம் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்