இந்த சந்திப்புக்குப் பின் காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் கார்த்தி சிதம்பரம் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பில் பேசியது தொடர்பாக அறிந்து கொள்வதற்காக சோனியா என்னை அழைத்தார். சிதம்பரத்துக்கு உறுதுணையாக காங்கிரஸ் நிற்கும் எனக் கூறியுள்ளார். இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெரும் பலத்தைத் தருகிறது’ எனக் கூறியுள்ளார்.