கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (20:22 IST)
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது
 
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,301 என்றும் கொரோனாவால் குணமானவர்களின் எண்ணிக்கை 1,614 என்றும் கர்நாடகா அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 17  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் கர்நாடகாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 18,970 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,248 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 28,88,520 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்