இந்த நிலையில் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை நெருங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,801 என்றும் கொரோனாவால் குணமானவர்களின் எண்ணிக்கை 18,573 என்றும் கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 179 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,95,254 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,313 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,30,198 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இன்று ஒரே நாளில் கேரளாவில் கொரோனா பரிசோதனை செய்தவர்களின் எண்ணிக்கை 1,70,703 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன