மோடி பிரதமராவதால் நாட்டை விட்டு வெளியேறும் பிரபல நடிகர்

வீரமணி பன்னீர்செல்வம்
சனி, 17 மே 2014 (16:28 IST)
நரேந்திர மோடி பிரதமாராக உள்ளதால் பிரபல வடஇந்திய நடிகர் கமால் கான் நாட்டை விட்டு வெளியேறுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று பிரபல வடஇந்திய நடிகர்  கமால்.ஆர்.கான் மற்றும் ஞலான பீடம் விருது பெற்ற எழுத்தாளர் அனந்த மூர்த்தி ஆகியோர் கடந்த வருடம் கருத்து தெரிவித்திருந்தனர்.
 
தற்போது பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமராவது உறுதியாகி விட்டதால் நடிகர் கமால் நாட்டை விட்டு இன்று வெளியேறுகிறார். விமான நிலையத்தில் இருந்து ட்விட்டர் வலைத்தளத்தில் “குட் பை”என்று ட்வீட் செய்துள்ளார்.