சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றார் இந்திரா பானர்ஜி,

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (11:10 IST)
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி  இந்திரா பானர்ஜி, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியுயர்வு பெற்ற நிலையில் சற்றுமுன்னர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
 
இந்திரா பானர்ஜியுடன் கே.எம்.ஜோசப், வினித் சரண் ஆகியோர்களும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர்.
 
முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் இருந்து விடைபெற்று செல்லும்போது, 'தனது கடமையை அச்சமும், பாரபட்சமும் இன்றி செய்ததாகவும், தான் பதவி வகித்த காலத்தில் ஒரு நாள் கூட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடவில்லை என்றும் இந்திரா பானர்ஜி கூறினார். மேலும் தமிழக மக்கள் மிக எளிமையானவர்கள் என்றும் அதேசமயம் கடுமையான உழைப்பாளிகள் என்றும் கூறிய இந்திரா பானர்ஜி கனத்த இதயத்தோடுதான் சுப்ரீம் கோர்ட் சென்றாலும், தனது நினைவுகள் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றத்தைச் சுற்றிதான் இருக்கும்' என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்