புதுச்சேரி கடலில் சிக்கி உயிருக்கு போராடும் இளம்பெண், வாலிபர் பரிதாப மரணம்

Webdunia
ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (07:41 IST)
இந்தியாவின் முக்கிய சுற்றுச் சுற்றுலா பகுதிகளில் ஒன்றான புதுச்சேரிக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் வெளிநாடு ஆகியவற்றில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். புதுச்சேரியில் படகு இல்லம், ஊசுட்டேரி, ஆரோவில், தாவரவியல் பூங்கா, ஆகிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் விரும்பி பார்ப்பதுண்டு. இதையெல்லாம்விட புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் குளிப்பதே சுற்றுலா பயணிகளுக்கு பேரானந்தமாக இருந்து வருகிறது 
 
புதுச்சேரி கடல் மிகவும் ஆபத்தானது என்று காவல்துறை எச்சரிக்கை விட்டும் அங்கு குளிக்கக்கூடாது என்று எச்சரிக்கை பலகை வைத்திருந்தும், பல இளைஞர்கள் தங்கள் உயிரை துச்சமாக மதித்து கடற்கரையில் குளிப்பதால் ஆழமான பகுதிகளில் சிக்கி உயிர் இழப்பு ஏற்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது 
 
இந்த நிலையில் நேற்று பெங்களூரில் ஐடி துறையில் பணிபுரியும் 8 பேர் புதுச்சேரியில் உள்ள கடற்கரையில் குளித்துக் கொண்டனர். அப்போது திடீரென ஒரு பெரிய அலை வந்து அவர்களை அடித்துச் சென்றதால் அவர்களில்4 பேர் கடலுக்குள் மூழ்கினர். 
 
இதனை பார்த்த அங்கிருந்த மீட்புப் படையினர் உடனடியாக கடலில் இறங்கி 3 பேரை மீட்டனர். ஒருவர் மட்டும் மாயமாகி விட்டதாகவும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் மீட்பு படையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட 3 பேரில் ஒரு இளம் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
 
புதுச்சேரி கடலில் குளிப்பது ஆபத்தானது என்றும், அதில் சிக்கி உயிர் இழப்பு ஏற்படுவது தொடர்ந்து நடை பெறுவதை அடுத்து கடலில் குளிக்க வேண்டாம் என அங்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் மீட்பு படையினர் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்