இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தில் ... 100 கிலோ குப்பைகள்

புதன், 4 டிசம்பர் 2019 (15:01 IST)
ஸ்காட்லாந்து நாட்டில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 100 கிலோ குப்பைகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டில்  ஹாரிஸ் என்ற  கடற்கரைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு நீலத் திமிங்கலம் இறந்து கரை ஒதுங்கியது. சுமார் 20 டன் எடை கொண்ட இந்தத் திமிங்கலத்தின் உடலை மீட்ட மருத்துவர்களை அதை பரிசோதனை செய்தனர்.
 
அப்போது, அதன் வயிற்றில், கயிறுகள், மீனவர்கள் பயன்படுத்திய மீன்வலைகள், பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்ற 100 கிலோ உடைய குப்பைகள் வெளியேற்றப்பட்டுள்ளது.
 
மேலும், இந்தக் குப்பைகளைத் தின்றதால்தான் திமிங்கலம் இறந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கடலை ஆட்சி செய்யும் திமிங்கலத்துக்கே மனித செயல்களால் இந்த நிலைமை என்றால், மீன்களுக்கு எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்