கனமழை எச்சரிக்கை: தமிழக அரசு வெளியிட்ட அவசர கால உதவி எண்கள்..!

Siva

புதன், 27 நவம்பர் 2024 (11:44 IST)
தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது. இதனால், தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்கள் என அனைத்து மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.

ஏற்கனவே, பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு மேலும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அவசர கால உதவி எண்களை வெளியிட்டுள்ளது. இந்த உதவி எண்கள் குறித்த தகவல்கள் இதோ:

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, வாட்ஸ் அப் - 94458 69848

நாகை - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800 233 4233, வாட்ஸ் அப் - 8438669800

மயிலாடுதுறை - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588

திருவாரூர் - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் - 94885 47941

கடலூர் - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் 9489930520



Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்