ரயிலில் வைட்டிங் லிஸ்ட் டிக்கெட்டா ? – இனிக் கவலையில்லை

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (10:55 IST)
ரயிலில் டிக்கெட் புக் செய்யும்போது வைட்டிங் லிஸ்ட்டில் இருப்போருக்கு உடனடியாக பெர்த் வழங்கும் புதிய திட்டத்தை ரயில்வேத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடைசி நேரங்களில் ரயில் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சிலருக்கு வெயிட்டிங் லிஸ்ட்டில் வரும். வெயிட்டிங் லிஸ்ட்டில் இருப்பவர்களுக்கு முன்பதிவு செய்தவர்கள் யாரேனும் தங்கள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் பெர்த் வழங்கப்படும். இதற்கு RAC எனப் பெயர். அதாவது Reservation against Cancel.

இந்த RAC டிக்கெட்களுக்கு பாதி பெர்த் வழங்கபடும். பயணம் செய்யவேண்டிய பயணிகள் வரவில்லையென்றால்தான் முழு பெர்த் வழங்கப்படும். அதற்காக பயணம் செய்ய இருப்பவரின் ஸ்டேஷனில் இருந்து இரண்டு ஸ்டேஷன் வரை டி.டி.ஆர். காத்திருப்பார். ஆனால் இப்போது ரயில்வேத்துறை கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தின் படி டி.டி.ஆருக்கு கொடுக்கப்படும் மொபைல் போனில் கேன்சல் செய்யப்படும் டிக்கெட் விவரங்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.

அதனால் உடனடியாக RAC டிக்கெட்டில் இருப்பவர்களுக்கு பெர்த் ஒதுக்கும் வசதி அறிமுகமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்