ஹரியானா பாஜக-வில் உட்கட்சிப்பூசல்.! தேர்தலில் சீட் வழங்காததால் அமைச்சர், எம்.எல்.ஏ ராஜினாமா.!!

Senthil Velan
வியாழன், 5 செப்டம்பர் 2024 (20:48 IST)
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் ரஞ்சித் சிங் ராஜினாமா செய்துள்ளார்.   
 
ஹரியானாவில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 5-ம் தேதி, மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு, பா.ஜ.க முதற்கட்டமாக 67 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.

இந்த நிலையில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ராணியா தொகுதிக்கு தனது பெயர் அறிவிக்கப்படாததைக் கண்டு அதிருப்தியடைந்த, முன்னாள் துணைப் பிரதமர் தேவி லாலின் மகனும், மாநில எரிசக்தி மற்றும் சிறைத்துறை அமைச்சருமான ரஞ்சித் சிங் சவுதாலா, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகினார். 


ALSO READ: பாஜகவில் ரவீந்திர ஜடேஜா.! மனைவி பகிர்ந்த புகைப்படம்..!!
 
இவரைத் தொடர்ந்து, பா.ஜ.க எம்.எல்.ஏ லக்ஷ்மண் தாஸ் நாபாவும் தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.   அதேபோல், முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க ஓ.பி.சி மோர்ச்சா பிரிவின் மாநில தலைவருமான கரண் தேவ் கம்போஜ், சீட் மறுக்கப்பட்ட காரணத்தால் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்து விலகினார். இதனால் ஹரியானா பாஜகவில் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்