ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருங்கள்: மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (13:30 IST)
ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருங்கள் என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது 
 
சீனாவில் நேற்று ஒரே நாளில் மூன்று கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதை அடுத்து அண்டை நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து மத்திய அரசு இன்று அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாராக வைத்திருக்கவும் என்றும் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும் என்றும் தெரிவித்துள்ளது 
 
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றையும் கண்டிப்பாக பின்பற்றா வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்