நாளை 13 மாவட்டங்களில் கனமழை: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்

Webdunia
சனி, 24 டிசம்பர் 2022 (13:24 IST)
நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்று முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தென்மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
இலங்கையின் திருகோணமலை பகுதியில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மையம் நிலை கொண்டுள்ளது என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
 
 மேலும் நாளை நாளை மறுநாள் தூத்துக்குடி ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்