'எமர்ஜென்சி' இந்திரா எடுத்த தவறான முடிவு: ராகுல் காந்தி!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (09:30 IST)
இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை ஒரு பிழை என்று ராகுல் காந்தி கருத்து. 

 
1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இத்தேர்தலில் அவர் முறைகேடுகளை செய்ததாக அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ராஜ் நரேன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குபின் வந்த தீர்ப்பில் இந்திரா காந்தி வெற்றி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, இந்திரா காந்தியை பதவியில் இருந்து விலகுமாறு கோரி பரவலாக போராட்டங்கள் நடைபெற்றன.
 
அப்போது, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், ஜனநாயகத்திற்கு குந்தகம் ஏற்படும் என்றும் கூறி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் இந்திரா காந்தி. ஆம், ஜூன் 25 ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சி எனப்படும் நெருக்கடி நிலை பிரகடனமானது. 
 
இந்நிலையில் எமர்ஜென்சி குறித்து ராகுல்காந்தி தற்போது கருத்து தெரிவித்துள்ளார். நெருக்கடி காலம் தவறானது என இந்திரா காந்தியே கூறியிருப்பதாக குறிப்பிட்டார் அவர், ஆனால் அந்த நெருக்கடி நிலை தற்போதைய சூழலிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் காங்கிரஸ் கட்சி எந்த காலத்திலும் நாட்டின் ஜனநாயக அமைப்புகளை கைப்பற்ற முயற்சி செய்ததில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்