அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு: வரலாறு காணாத வீழ்ச்சி

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (10:39 IST)
கடந்த சில நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக வேகமாக சரிந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளதால் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.68 என வீழ்ச்சி அடைந்தது
 
கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரூபாயின் மதிப்பு என்பது 82.32 என இருந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களில் 82.68 ரூபாயாக உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் சமையல் எண்ணெய் ஆகியவை விலை உயரும் என்று கூறப்படுவதால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்