இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு: பாதிப்புகள் என்ன?

வெள்ளி, 7 அக்டோபர் 2022 (18:07 IST)
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து பொருளாதார அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்
 
இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 82 ரூபாயை தாண்டி வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்றைய பங்குச்சந்தை முடிவின் போது இந்திய ரூபாயின் மதிப்பு என்பது 82.32 என வர்த்தகமானது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமையல் எண்ணெய் கச்சா எண்ணெய் ஆகியவை விலை உயரும் என்றும் கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் ஏற்றுமதி செய்பவர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .அதேபோல் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்பும் போது அவர்களும் லாபம் அடைவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
 


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்