இந்தியாவில் விலை இல்லை; வெளிநாடுகளில் மவுசு – வெங்காய ஏற்றுமதி அதிகரிப்பு

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (11:42 IST)
வெங்காயத்தின் விலை இந்தியாவில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு அதிகளவில் வெங்காய ஏற்றுமதி நடைபெற்று வருகிறது.

வெங்காயத்தின் விலை இந்திய சந்தையில் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்ததால் வெங்காய விவசாயிகளும் மற்றும் வெங்காய வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் அவர்களுக்கு இப்போது ஆறுதலான ஒரு செய்தி கிடைத்துள்ளது.

உலகளவில் வெங்காயத்திற்கான தேவை தற்போது அதிகரித்து வருகிறது. அதை முன்னிட்டு வெங்காய வியாபரிகள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளனர். அதிகமாக மலேசியா மற்றும் துபாய் போன்ற அரபு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் அளவைவிட இந்தாண்டு 5 சதவீதம் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்