நீண்ட இடைவெளிக்கு பின் 5000க்கும் குறைவான கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை

Webdunia
திங்கள், 1 மே 2023 (12:07 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 10,000 அதிகமான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் அது படிப்படியாக குறைந்து தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் 5000க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மேலும் கூறியிருப்பதாவது:
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,282 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47246 என குறைந்துள்ளதாகவும்  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு   14 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 5,31,547 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்