விரைவில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Webdunia
திங்கள், 1 மே 2023 (12:00 IST)
திருச்சியில் மாபெரும் மாநாடு நடைபெற்று வெற்றி பெற்ற நிலையில் விரைவில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்படும் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவின் ஒரு அணி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த அணி சமீபத்தில் திருச்சியில் மாநாடு நடத்தியதை அடுத்து அந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் திருச்சி மாநாடு வரவேற்பு பெற்றுள்ளதை அடுத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. 
 
விரைவில் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து மண்டல வாரியாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் திருச்சி மாநாடு மிகப்பெரிய அளவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்