அதிவேகமாக பரவும் கொரோனா: டாப் கியரில் இந்தியா!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (08:11 IST)
கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 3,63,76,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 27,393,733 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,059,915 பேராக அதிகரிப்பு என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
 
இதேபோல இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68,32,988 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 58,24,462 பேர் குணமடைந்துள்ளனர், கொரோனாவிற்கு 1,05,554 பேர் நாடு முழுவதும் மரணமடைந்துள்ளனர். 
 
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது வெளிப்படையாகியுள்ளது. இந்திய அரசு 24 மணி நேரத்தில் 72,049 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 48,510 பேருக்கும், பிரேசிலில் 31,404 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதன்மூலம் உலகிலேயே மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்