ஃபைனல் ஸ்டேஜில் சோதனை: கொரோனா தடுப்பூசி கிடைப்பது எப்போது?

புதன், 7 அக்டோபர் 2020 (08:15 IST)
கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. 
 
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 36,038,353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கொரோனாவில் இருந்து 27,144,398 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,054,541 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
மேலும் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு ஆளான 7,839,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க வேண்டிய நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. 
 
இது குறித்து சுகாதார அமைப்பின் தலைவர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 9 கொரோனா தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனை முயற்சியில் உள்ளன. இவை வெற்றியடையும் பட்சத்தில் இந்த தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பு மூலம் 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2 மில்லியன் மக்களுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என மிகுந்த நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்