பிட்காயின் முதலீட்டாளர்கள் 10 ஆயிரம் பேர்களுக்கு நோட்டீ'ஸ்: வருமான வரித்துறை அதிரடி

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (05:55 IST)
இந்தியர்கள் பிட்காயினில் முதலீடு செய்ய வேண்டாம், பிட்காயின் முதலீடு பாதுகாப்பானது அல்ல என்று மத்திய அரசு எச்சரித்து வந்தபோதிலும் அதிக லாபத்திற்காக ஆன்லைனில் பிட்காயினில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில் பிட்காயின் முறைப் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட சுமார் 10 ஆயிரம் பேருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 22 ஆயிரம் கோடி ரூபா கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பிட்காயினில் இந்தியர்கள் மட்டும் முதலீடு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக  தகவல் தொழில்நுட்பத்துறை, ரியல் எஸ்டேட், தங்க வர்த்தகம் ஆகிய துறைகளில் இருப்பவர்களே பிட்காயினில் அதிக முதலீடு செய்வதாகவும்,  பிட்காயின் முதலீடு பாதுகாப்பற்றது என மத்திய அரசு பலமுறை எச்சரித்தும் தொடர்ந்து முதலீடு செய்து வருபவர்களுக்கு ஆலோசனை வழங்கவே இந்த நோட்டீஸ் ஏற்பாடு என்றும், மீறி பிட்காயின் பரிவர்த்தனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்